செல்வச் செழிப்பான லௌகீக வாழ்விலிருந்து விடுபட்டு பற்றற்ற நிலையில் ஞானத்தைத் தேட முயலும் புதிய சித்தார்த்தனைப் பற்றிய
விறுவிறுப்பான மொழிநடையில் அமைந்த நாவல்.
அரசகுமாரன் சித்தார்த்தன் போதி மரத்தடியில் புத்தப்பிரானெனும் ஞானியாக பரிணமித்ததை பின்புலமாகக் கொண்டு நாவல் புனைவு
கொள்கிறது. காலமாற்றங்களுக்கு ஏற்றபடி நவீன சித்தார்த்தனின் வெளியேற்றமும் ஞானம் பிடிபடும் விதமும் வித்தியாசமான தளங்களில் அரங்கேறுகின்றன.
ஞானம் சித்தித்த பின் தடுமாற்றங்கொள்ளாத மனவெழுச்சியில் தெரிந்தெடுக்கும் முடிவு வியப்பைத் தருவதானாலும் நிறைவையும் தரும்
விதம் அலாதியானது.