குமுதம் ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இக்கதைகள் நம் மண்ணின் மணம் வீசுபவை நம் மக்களின் வாழ்வைப் பறைசாற்றுபவை.அன்றாடும் நம் வாழ்வில் சந்திக்கும் எதிர்கொள்ளும் மாந்தர்களின் அன்றாட வாழ்வை அவர்களது பண்புகள்,கவலைகள்,அச்சங்கள்,அலைச்சல்கள்,மகிழ்ச்சியான தருணங்கள் என வெவ்வேறு வித்தியாசமான உணர்வுகளின் ஊடாக அதனதன் அர்த்தபூர்வங்களோடு இக்கதைகளில் காணலாம்.இக்கதைகள் ஒவ்வொன்றும் சமூகக் கடமையுணர்வோடும் சமூகப் பிரக்ஞையோடும் அதேநேரத்தில் மிக எளிமையாகவும் எழுதப்பட்டிருப்பது இத்தொகுப்பின் சிறப்புகளில் ஒன்றாகும்.