இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை. வழக்கின் ஆரம்பப்புள்ளி முதல் முடிவு வரையிலான நேர்மையான அலசல். முழுமையான பின்னணித் தகவல்கள், ஆதாரங்களுடன் கூடிய விசாரணை விவரங்கள். வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமனின் இந்நூலை, ராஜிவ் கொலை வழக்கு பற்றிய ஆதாரபூர்வமான முதன்மை ஆவணமாகக் கொள்ளலாம். சதித்திட்டம் குறித்த விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? புலன் விசாரணை செய்த அதிகாரிகள் சந்தித்த சிக்கல்கள், சவால்கள் என்னென்ன? யாரால், ஏன் அவை தோற்றுவிக்கப்பட்டன? இந்திய உளவு நிறுவனங்களின் நிகரற்ற மெத்தனப் போக்கின் பின் உள்ள அரசியல் என்ன? விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசியல் பெரும்புள்ளிகளுக்கும் இடையிலான நுட்பமான தொடர்புகள் குறித்த செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதைவிட அதிர்ச்சிகரமானது, புலிகளோடு நெருங்கிய தொடர்புடைய சிலர் இறுதிவரை சரியாக விசாரிக்கப்படாதது. |