புயலின் மையம்
மனிதன் தன் அறிவியல் வளர்ச்சியினால், தன்னம்பிக்கை என்ற வரையறைக்கு அப்பால் சென்று ஆணவம் கொள்ளும் போது, எந்தச் சோதனை வந்துற்றாலும் கலங்காது தாங்கும் திறன் நிலைகுலைந்து போகிறது. தான் என்ற உணர்விலே மட்டும் நிற்பவனுக்கு, அந்த உணர்வுக்கு ஊறு வரும்போது பற்றிக்கொள்ள ஆதாரம் கிடைக்காமல் அவன் தடுமாறுகிறான். அறிவியல் வளர்ச்சியில் மட்டுமே முன்னேற்றம் பெற்ற நாடுகளிலும், மனிதனின் தனித்துவத்தைப்போற்ற இயலாத அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் சிந்திக்க இயலாதவர்களாகப் பிணிக்கப் பெறுவது சாத்தியமாகிறது.