புதியதோர் உலகம்
காலம் பொல்லாத்து. இந்தக் காலம்தான் பச்சோந்தி போன்று உலகையே நிறம் மாற்றிக் கொண்டிருக்கிறது. இதே காலம்தான் தங்கத்தமிழுக்குச் சங்கம் கண்டு- தரணியாண்ட தமிழினத்தைப் பரங்கியரின் கொத்தடிமைகளாய் உலகெங்கும் இழுத்துச் செல்ல வைத்த்து. நமது முன்னோர்களும் அவ் வழியே வந்தவர்கள்தாம் என்பதும் வரலாறுதான்.
வெயிலில் நடப்பவனுக்குத்தான் நிழலின் அருமை தெரியும். பட்டினி கிடந்தவனுக்குத்தான் பசியின் கொடுமை புரியும். எனவே இனத்தின் கடந்த கால வரலாறு தெரிந்தால்தான் இன்றைய தலைமுறையினர்க்கு எதிர்காலத்தில் தங்களின் வாழ்க்கைப் பாதையைச் சரியான வழியில் நிலையாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற படிப்பினை ஏற்படும். ஆகவே, இனத்தின் விழிப்பஅர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் வரலாறு ஒரு தூண்டுகோல் என்பதை அடியேனின் கருத்து.
அந்த முறையில்தான் சப்பானியர் ஆட்சியில் நம்மவர்கள் வாழ்ந்த வரலாற்றை இன்றைய தலைமுறையினர்க்கு எடுத்துக்காட்ட விரும்பினேன்.
இரண்டாவது உலகப்போரில் மலாயா நாட்ழல் ஆங்கிலேயர்களால் அனாதைகளாக்க் கைவிடப்பட்ட தமிழர்கள் பட்ட தும்பங்கள், இழந்த இழப்புகள் இமயம் போன்றவை. அவற்றில் ஒரு துரும்பைத்தான் அசைத்திருக்கிறேன். அதுதான் புதியதோர் உலகம்..