சுவாமி சுகபோதானந்தாவின் போதனைகள் பலரது இதயங்களில் பிரவேசித்துள்ளன.கல்வியின் இதயம்,இதயத்தின் கல்விதான்.ஒவ்வொரு கணத்திலும் வாழ்க்கையில் மூழ்கித் திளைத்து,புதிய சுவைகளைக் கண்டறியும் சாத்தியக் கூறு நிறைந்து கிடக்கிறது.வாழ்வில் நிறைவு ஏற்படாவிடில் அது தந்தி அறுந்த வீணையாகி விடும்.இந்த குறையை நாம்தான் களைய வேண்டும்.சிகரத்தையும் சமவெளியையும் ஆனந்தமாக அனுபவியுங்கள் என்கிறார் நவீன குரு.மலைச் சிகரத்தை எட்டி மகிழ்ச்சி பெறுக;மலைச்சாரலை அடைந்து மன அமைதி பெறுக.இதனால் உங்கள் வாழ்க்கைக் கடலில் ஒரு புதிய ஆழம் காண்பீர்கள்.
அஹந்தையை அடிப்படையாகக் கொண்ட லட்சியங்கள் எல்லாம் மனக்கோளாறை உண்டு பண்ணுபவை.பிரபஞ்ச லட்சியங்கள் ஆன்மீகத் தொடர்பை ஏற்படுத்துவதனால் நமது போராட்டங்கள் புனிதம் அடைகின்றன.உண்மையான ஆத்மா,கார்த்தா அல்ல;எனவே அதற்கு கவலை இல்லை;வேதனை இல்லை;உள்ளத்தில் எரிமலை போன்ற குமுறலும் கொந்தளிப்பும் இல்லை.உண்மையான ஆத்மா பேரின்பம்,மவுனம்,அன்பு ஆகும்.
சுமாமிஜி சுகபோதானந்தாவின் செறிந்த மொழிகள் பலரது வாழ்வில் மாறுதல் காண சக்தியை அளிக்கும்.இன்றைய யதார்த்த,லோகாயத உலகில் வெற்றி,திருப்தி,ஆன்மீக அறிவு பெறுவதற்கான மார்க்கங்களை சுவாமிஜி சுட்டிக் காட்டுகிறார்.