சமீபமாக என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது. எந்தப் புத்தகத்தை வாசிப்பது என்ற அங்கலாய்ப்பில் இருக்கிறவர்களுக்கான தெரிவை தெளிவாக
எடுத்துரைக்கும் புத்தகம் இது.
பெருநகரங்களில் வசிப்பவர்களும் , தீவிர இலக்கிய முகாந்திரங்களில் இருப்பவர்களும் மட்டுமே அறிய வாய்ப்புள்ள சில நல்ல புத்தகங்களை
அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள உதவும் அரிய முயற்சியே இந்நூல். ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி அதன் சிறப்புகளை
விவரிப்பதோடு விமர்சன நோக்கிலும் அணுகும் விதம் நூலாசிரியரின் சிறப்பு. இப்புத்தகத்திலிருந்து தொடங்கும் நீட்சியான வாசிப்பு
தேர்ந்ததொரு இடத்திற்கு வாசகரை முன்னெடுத்துச் செல்லும்.
‘புத்தகங்களைப் பற்றிய விவரப் புத்தகம்’ என்றளவில் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்க்கப் பெறுவதே இந்நூலின் சிறப்பு.