புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் பி.வி. ஜகதீச அய்யர் விலை ரூ.160/-
தசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்குள்ளாகி இருக்கும் வேளையில் நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், பண்பாட்டு, இயற்கை வளங்களையும் ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது. 56 தேசங்களின் புராணப் பின்னணியைச் சொல்லி அதன் பிரத்யேகமான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், சீதோஷ்ணம் வரை சிறப்பான தகவல்களைத் தருவது இந்நூலின் கூடுதல் சிறப்பு. நூறு வருடங்களுக்கு முன் தமிழ் உரைநடை எப்படி இருந்தது என்பதில் ஆர்வமுள்ளவர் களுக்கும் இப்புத்தகம் பல வெளிச்சங்களைத் தரக்கூடியது. இந்நூலின் பிரதியை பாதுகாத்து வைத்திருந்து இதன் மறுமதிப்பை வெளியிட உதவிய ‘சேக்கிழார் அடிப்பொடி’ முனைவர் டி. என். ராமச்சந்திரன் அவர்களுக்கு எமது நன்றி.