நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்தில் பிரிவினை வாத இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஒரு போராளி போலீஸ்காரர்களால் துரத்தப்பட்டு, அவர்களிடமிருந்து தப்புவதற்காக ஒரு முன்னாள் சம்ஸ்தான மன்னனின் அரணமனைக்குள் ஒளிந்து கொண்டு அதில் உள்ளவர்களத் துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொண்டு தங்கியிருக்கிறான். அந்தவீட்டு மருமகள் அவனை எப்படி சமாளிக்கிறாள் என்பதைச் சுவையாக சொல்லும் இந்த நாவலில் முக்கிய பாத்திரங்களின் உணர்ச்சிகளின் சித்தரிப்போடு நாட்டின் அரசியல் நிலைமையும் விவாதிக்கப்படுகிறது.