’மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை,இலக்கியம்,அரசியல்,திரைப்படம்,பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு.கவிஞன்,நாவலாசிரியன்,விமர்சகன்,மொழிப்பெயர்ப்பாளன் என்கிற அடையாளங்களெல்லாம் கூச்சத்திற்குரியவை என்றே நான் புரிந்திருக்கிறேன்.இலக்கியம்,கோட்பாடு,திரைப்படம்,அரசியல்,கவிதை,மொழியாக்கம் என இதுவரையிலும் என்னுடைய 38 நூல்கள் வெளியாகியிருக்கின்றன.பிரசுரம்தான் எழுதுவதற்கான அடையாளமெனில் எழுதத்துவங்கி 35 ஆண்டுகளாகிவிட்டன.தற்போது இலண்டனுக்கு வெகு தொலைவிலுள்ள குறுநகரொன்றில் வசிக்கிறேன். ‘எமது வாழ்வு இவ்வாறுதான் கொண்டு செல்லப்பட வேண்டும் என நாம் திட்டமிட்டுச் செயலாற்றிக்கொண்டிருக்கும்போது,எமக்கு நேர்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்வு’எனும் பீட்டில்ஸ் பாடகன் ஜான் லெனானது கூற்றை எனது தலையினுள் எங்கெங்கும் நான் கொண்டு திரிகிறேன்.