பெரியாரும் தமிழ்த் தேசியமும்
“பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற இந்த நூலை ஆழ்ந்து கற்றபோது என் மனதில் தோன்றிய கருத்துகளைக் கூறியுள்ளேனே தவிர இந்த நூலுக்கான அணிந்துரை என்ற தன்மையில் எந்தச் சிறப்பும் இதில் இல்லை என்றே கருதுகிறேன். நூலின் முதல் கட்டுரையாக வரும் “பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற நிக்ழ்வுக்கான துண்டறிக்கை” பெரியார் மீது வைக்கப்பட்ட (பழிகளை) விமர்சனங்களைப் பட்டியலிட்டு விடைகளுக்கான விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது; இன்றைய நிலையில் சனநாயகம் என்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய வாதத்தை இனக்குழுவாதமாகச் சிறுமைப்படுத்துவதின் அபாயத்தை அறிவிக்கிறது. தனிமனித விடுதலையிலிருந்து தேசிய விடுதலை வரை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் சியகு விரிப்பதை எடுத்துக் காட்டுகிறது.
பேராசிரியர் து.மூர்த்தி அலிகர் முசுலீம் பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய இந்நூலுக்கான அணிந்துரையிலிருந்து…