பேர் சொல்லும் நெல்லைச் சீமை
தொன்மையான நதிக்கரையின் நாகரிகத்தின் வரலாற்றையும், பண்பாட்டு நிகழ்வுகளையும் இந்நுலின் ஆசிரியர் அப்பணசாமி சுருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
நாட்டார் கதைப்பாடல்கள், அவற்றில் வெளிப்படும் நாட்டார் தெய்வங்களின் மூலப் பிற்[[இயல், சமுகப் பின்னணி அனைத்தும் கதை சொல்லும் பாணியில், தமிழ்ச் சமுதாயத்தின் முந்தைய வாழ்க்கை நிலையைப் புரிய முடிகிறது. இதிகாசப் புராணங்களின் கதாபாத்திரங்களோடு இணைத்துச் சொல்லப்பட்டாலும், கிராமப்புறச் சாதிக் கட்டுக்கோப்புகளில் பிணைந்திருக்கும் கொடூரங்களை உணர வைக்கிறது.
- ஆர்.நல்லகண்ணு