ஆண்களுக்கு எல்லைகள் வகுத்து,தங்களுக்கான உலகை நிறுவிக் கொண்ட பெண்கள்.ஆண்கள் பகிஷ்கரிக்கப்பட்ட அந்தரங்க உலகம்.அந்த உலகின் ஆளுமைகள்.அதன் அரவணைப்புகள்,அளித்த அடைக்கலங்கள்.வாழ்வைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களான பாட்டிமார்கள்,கதை கதையாக விரிந்த பாடங்கள். ‘பெண்கதை எனும் பெருங்கதை’ பலரும் அறியாத,ருசிகரமான,பெண்ணின் புதிய கோலங்களை,கோணங்களை அளிக்கிறது.
பெரும் இலக்கிய ஆளுமை கி.ராஜநாராயணன் அவர்களின் இந்தத் தொகுப்பு,ஏற்கனவே வெளிவந்த அவரது தனித்துவ முத்திரை பதித்த வட்டார வாழ்வின்,வழக்கின்,குறிப்பாக அவர் கண்டெடுத்த பெண் கதைகளின் தொடர்ச்சி.