பெண் விடுதலை குறித்து, நான் ஏன் கவலைப்படுகிறேன். என் விடுதலை பற்றி;க் கவலைப்படுவதால், பெண் விடுதலை இன்றி, ஆண் விடுதலை இல்லை. இங்கு ஆண் ஒவ்வொருவனும் இரண்டு வகைகளில் அடிமைப்பட்டிருக்கிறான. சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம் என்பவைகளே அவை. இங்கு பெண் ஒவ்வொருத்தியும் சமூக அடிமைத்தனம் என்கிற மூன்று அடிமைச் சக்திகளுக்கு அடிமைப்பட்டுள்ளாள். இந்த மூன்று அடிமை விலங்குகளும் ஒருநாள் இற்று விழவேப் போகின்றன. ஒரு புரட்சி தோன்றும். சகல ஆபாசங்களையும் சகல அடிமைத்தனங்களையும் சகல பிற்போக்குச் சக்திகளையும் அந்தப் புரட்சித் தீ மென்று தின்னும். இது சத்தியம்.