தமிழின் முதல் தலித் நாவல்.தமிழ் இலக்கியங்களில் இலைமறை காய்மறையாகப் பேசப்பட்ட விஷயங்களைச் சாதிய அரசியலின் அன்றாடா உரையாடலாக்கி,சாதி ஒழிப்பிற்கு முனைப்பு கூட்டிய படைப்பு இது;எண்பதுகளின் தமிழ்ச் சமூகத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய நாவலும்கூட.சிவகாமி தொடங்கிவைத்த இந்தப் போக்கே தலித் தன்வரலாறுகள் தொடர்ந்து எழுதப்படுவதற்கும் பெரும் உந்துசக்தியாக இருந்து வருகிறது.தலித்மக்களின் போராட்டங்களையும் அவர்களுடைய தலைமை வீர்யம் மிக்கதாக இருக்க வேண்டியதையும் மக்கள் மொழியில் படைத்திருக்கிறார் இந்நாவலாசிரியர்.