எங்களது கும்பத்தில் தாய்க்குத் தலைமகனாகப் பிறந்த என் அண்ணன்,எனக்குத் தாயாகவே என்னைப் பராமரித்து வந்தார்.தகப்பனுக்கு கடைசி மகனான இந்த தம்பி கங்கை அமரன்,இன்று வரை எனக்குத் தந்தையாகவே இருந்து வழி நடத்துகிறான்.
அறிவுரைகள் கூறுவதிலும் அன்புகாட்டி ஆதரிப்பதிலும் அமர் என் தந்தைதான்.இது என் உள்ளத்திலிருந்து தொப்புள் கொடி உறவுடன் வந்த உண்மையான வார்த்தைகளே.அம்மா பெத்ததில் உயிருடன் இருப்பது நான்,இளையராஜா,கங்கை அமரன்.இந்த மூவரும் இனியும் இதே தாயின் வயிற்றில் உடன்பிறப்புகளாகப் பிறப்போமா என்று தெரியவில்லை.எங்களைடைய ஒற்றுமைகளுக்கு உரமிடுவதைப் போலத்தான் தம்பி அமர் செயல்பட்டு வருகின்றான்.அதுதான் தம்பியின் மகிழ்ச்சிக்கு காரணமாகவும் இருக்கிறது.