பாதுகாப்புத் துறையில் ஊடுருவும் வல்லரசியத்துக்கு வேளாண்மையில் ஊடுருவது ஒரு பொருட்டே இல்லை. வேளாண்ம முழுவதும் ஒன்றிரண்டு
வடஅமெரிக்கக் குழுமங்களின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது. விதைச்சட்டம், மரபீனி மாற்றம் பயிர்ச்சட்டம், உணாவுப் பொருள்
கட்டுப்பாட்டுச் சட்டம், சிறு உணவு விடுதிகளையும் உணவு பொருட்களைச் சிறிய அளவில் செய்து விற்பதையும் தரப்படுத்தும் சட்டம், மருந்துக்
கொள்கை ஆகிய எல்லாச் சட்டங்களையும் இயற்றுவதற்கான அறிவுரைக் குழுக்களில் பன்னாட்டு மலை விழுங்கி நிறுவனங்களின் சார்பாளர்களும்
இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் நம் நாட்டு மக்களுக்கான சட்டங்களை இயற்றுவார்கள். கொள்கைகளை வகுப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.