இது ராஜபாட்டை.இரு மருங்கும் உயர உயரமான கட்டடங்கள்.இந்தப் பகுதியில் புழங்கும் கார்கள்.அந்தக் கார்களை இப்போது நிறைய குருடர்கள்,படுத்து உறங்கப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
பெரிய படகுக்கார் ஒன்று வீடாகவே உருமாற்றம் பெற்றிருந்தது.ஒரு வீட்டுக்குத் திரும்பி வருகிறதை விட காருக்குத் திரும்புவது குருடர்களுக்கு எளிதாய் இருந்தது போல.இதில் இப்போது குடியிருப்பவர்கள் திரும்பி வர வேண்டுமெனில் எப்படி வந்து சேர்வது?
அகதி முகாமில் நான் சொன்ன வழிமுறை தான்.அங்கே படுக்கைகளுக்கு எண்ணிக்கை வைத்தோம்.இங்கே கார்களை கோடியில் இருந்து ஒண்ணு ரெண்டு என எண்ணியபடி வந்து தன் காரை அடையலாம்.வலது வாடை.27வது கார்.நான் வீட்டுக்குவந்தாச்!