பாணர்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சங்க காலம்தான்.அங்கே அவர்கள் வீரயுகப் பாடல்களை பாடியும் கலைகள் பல நிகழ்த்தியும் பரிசில் பெற்றார்கள்.
சமகாலத்தில் அவர்கள் எவ்வாறு அலைகுடிகளாகவும் மிதவை சமூகங்களாகவும் பரிணாமம் பெற்று,நாடோடிகளானார்கள் எனும் கதையை விவரிக்கிறது இந்நூல்.இதை வரலாற்றினூடாக வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும்குறுக்கும் நெடுக்குமாக நடப்பதன் மூலம் பாணர்களின் பண்பாடு குறித்து பக்தவத்சல பாரதி ஒரு மானிடவியல் தொடர்ச்சியை முன்னெடுக்கிறார்.