ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
பாரி கிராமம். பெருநகரம், அமெரிக்க நகரம் என்று பல இடங்களில் வழ்ழ்ந்தவர். அவரைச் சுற்றி நிகழும் மனித நாடகங்களை உன்னிப்பாய்க் கவனிப்பவர். வெறும் பதிவு என்ற அளவீட்டைத் தாண்டி, உணர்வுப் புர்வமாய் அவர் நிகழ்ச்சிகளுடனும் மனிதர்களுடனும் ஒன்றிப் போகிறார். இவரது கட்டுரைகள், வாழ்க்கையைப் பற்றிய ஒரு புது உண்மையைப் புரிந்து கொண்டவையாக அல்லது புரிந்து கொள்ள முன்வைப்பவையாக உள்ளன. மனௌணர்வு பற்றி உளவியல் ரீதியான சிறு ஆய்வுகள் அன்றாடம் ஏற்படுத்தும் புதிய கண்ணோட்டம் இவை போன்றவை இவர் கட்டுரைகளுக்குக் கருபொருளாய் அமைந்துள்ளன.