மகர்கள் எனும் மகாராஷ்டிர தலித்துகளைப் பற்றிய நிறைவான பதிவுகள் காலமுறையில் நூலாசிரியரின் சுயசரிதையாக வடிவம் பெற்றுள்ளது.
அம்மக்களின் இருப்பு, இயலாமை, புறக்கணிப்புகளும் போராட்டக் களம் அம்பேத்கார் வழி வலுப்பெற்றதையும் காட்சிகளாக விவரிக்கிறது.
அம்பேத்கரின் சமூக மற்றும் அரசியல் இயக்கமும், எதிர்கொண்ட சவால்களும் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. அந்தக் காலச் சூழலுக்கே நம்மை இட்டுச்செல்லும்
வலுவான வரலாற்றுப்பதிவு எனும் வகையில் குறிப்பிடத்தக்க கவனம் பெறுகிறது.
தலித் சமூக வளர்ச்சிப் படிநிலைகளின் வலியும் பாடுகளும் மிகுந்த செவ்விய தடங்களை கண்கூடாக அறியமுடிகிறது இந்நூலில்.