ஒரு காதல் கதையின் நான்காம் முடிவு திரைப் படத்தைனை பார்த்துவிட்டு வெளியே வந்த காதல் ஜோடி திருச்செல்வன் மற்றும் லட்சுமியிடம் நிருபர்கள் கேட்ட போது...
இந்தக் கதையின் மூலமாக இயக்குநர் மாகீர்த்தி,தெம்புலத்தாண்டோர் மக்கள் கழகத்தின் தலைவர் இளமுகிலன் அவர்களுடைய இரட்டை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு நில்லாமல்,ஆணவக் கொலைக்கு பலியாக இருந்த எங்களையும் எங்களுடைய மக்களையும் அவர் நடத்திய மகீர்த்த நாடகத்தின் மூலம் காப்பாற்றியிருக்கிறார்.இளமுகிலனின் வீட்டில் மலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த பெஞ்சாலம்மாவும் அவருடைய வெண்புள்ளிகளால் பாதிக்கப் பட்ட மகளும் இந்தக் கதையில் தங்களுக்கு அளிக்கப் பட்ட முக்கிய பாத்திரங்களை நினைத்து கண்ணீர் விட்டதையும் நாங்கள் பார்த்தோம்.இந்தக் கதை வெளியாகும் சமயத்தில் தெ.ம.கவின் அடுத்த தலைமுறை வாரிசாகா சரவணன் தேர்வாகியிருப்பது நிம்மதியளிக்கிறது.தெம்புலத்தாண்டோர் மக்கள் கழகம் எனும் ஒரு தேசிய சாதியக் கட்சியை வரலாற்றிலேயே முதன் முறையாக இயற்கைப் பேரிடர் தடுப்புக் கழகம் என்று பெயரிட்டு,அக்கட்சியின் சாதி அடையாளத்தை இழக்கச் செய்திருக்கும் சரவணன் அவர்கள்,நல்ல தலைமையாக வளர வாய்ப்புள்ளது என்று நிரூபித்திருக்கிறார்.