உலகம் ஒரு கொடுங்கோன்மையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.இந்த நிலை தீன்றுவதற்கான சாத்தியக் கூறுகள் முதலாண்மையில் எப்போதுமே முதலத்திற்குப் பொருட்டன்று. பொருள்களின் அளவை [அல்லது எண்ணிக்கையைப்] பெருக்குதல்-அதாவது,மேன்மேலும் பொருள்களை உருவாக்கிக் குவித்தல்-முதலாண்மையின் இன்றியமையாக் கூறாகப் பொதிந்துள்ளது.
ஆனால்,அந்த வேட்கை இப்போது மிகப் பெரும் சூழலியல் பாதிப்புகளைத் தோற்றுவித்துள்ளது.இப்புவியின் வளங்களுக்கும் ஓர் எல்லை உண்டு என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.அருகிவரும் இயற்கை வளங்களை ஆளுமை செய்யும் உரிமை யாருக்கு என்ற வினா மேலெழுந்துவருகிறது.