எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது கலை உலக அனுபவங்களைப்பற்றி எழுதிய கட்டுரைத் தொகுப்பு.
ஒரு கலைஞன் என்பவன் சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்மக்களைவிடவும் நலிந்துகிடப்பவன். மாறாத சமூகத்தில் வெண்ணை விடப் பரிதாபத்துக்குரிய ஜந்து கிடையாது. மாறிய சமூகத்தில் அவளைவிட மாபெரும் சக்தியும் இல்லை என்கிற அனுபவம் இந்த நூற்றாண்டில் மனித ஜாதிக்கு வந்திருக்கிறது. அதனால்தான் எழுதுகிறவன் கலைஞர்களில் சிறப்பானவன் என்று நான் கண்டுகொண்டேன். பிகாசோவின் ஓவியங்களைவிடவும் பீதோவனின் இசைக் கோலங்களைவிடவும் ஹ்யூகோவின் ஒரு வாக்கியம், கதேயின் ஒரு கடைச்சொல் உலக மக்களை எல்லாம் ஆட்டிப்படைத்துவிடும். இசை கேட்டாரை மட்டும் பிணிக்கும், இலக்கியம் கேளாதாரும் வேட்ப காலகாலத்துக்கும் நிலைக்கும்.