டோரு வாட்டனபி , அவனது விருப்பத்துக்குரிய பீட்டில்ஸ் பாடலைக் கேட்க நேர்மையில், அவனது உற்ற நண்பனான கிஸுகியுடனான
காதல் ஞாபகத்துக்கு வந்துவிடுகிறது. உடனடியாக அவன் கிட்டதட்ட இருபதாண்டுகளுக்கு முந்தைய டோக்கியோவில் அவனது மாணவப் பருவத்துக்கு...
அசாதாரணமான நட்பு, சுதந்திரமான பாலுறவு, காதல், இழப்பு, ஆசை சார்ந்த உலகத்துக்குத் திரும்புகிறான். அச்சமயம் அவனது வாழ்வினுள் மிடோரி எனும்
இளம்பெண் குறுக்கிட, கடந்தகாலமா, எதிர்காலமா எதைத் தேர்வுசெய்வது எனும் இக்கட்டுக்கு ஆளாகிறான்
இந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960 - ந் பாப் உலகம் குறித்த
ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது.