நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
காக்கைக் குருவி எங்கள் ஜாதி
டலும் மலயும் எங்கள் கூட்டம்’
ன்றான் பாரதி. இந்த உலகமே ஒரு ஒற்றை உயிர்போல இயங்குகின்றது என்றார் சூழலுயல் நிபுணர் ஜேம்ஸ் லவ்லாக். நாம் வாழும் உலகின் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் உயிர்த் துடிப்பாய் வாழும் உயிர்களைப் பற்றிய அறிமுகம் சூழலியலின் முதற்படி. எல்லோரும் சூழலியல் உணர்வு பெற்றாலன்றி நாம் வாழும் பூவுலகைக் காக்க இயலாது என்று கூறும் சு.நாராயணி, இனிய எளிய தமிழில் நெஞ்சை அள்ளும் பல உயிரினங்களைக் குறீத்து அறிமுகம் செய்து வைக்கிறார்.