உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம் இக்கதையின் நாயகன் அனுபவிக்கிறானோ, அது நம்மையும் தொற்றிக் கொள்கிறது. நாவலைப் படிக்கப் படிக்க அடுத்து அவனுக்கு என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது.