நேருவின் ஆட்சி
நேருவைப் போற்றுவதற்கும்ம் தூற்றுவதற்கும் முன்னர் கட்டாயம் வாசிக்கவேண்டிய புத்தகம் இது!
இன்று இந்தியாவின் பெறுமைகளாகச் சுட்டிக்காட்டப்படும் அத்தனை அம்சங்களுக்கும் அடித்தளமிட்டவர் நேரு பேருமிதப்படும் அதே வேளையில், இன்று இந்தியாவைச் சூழ்ந்திருக்கும் அத்தனைப் பிரச்னைகளுக்கும் நேருவின் அணுகுமுறைகளே காரணம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
ஜனநாயகம், நேர்மை, நல்லாட்சி, தொலைநோக்குப் பார்வை ஆகியன நேருவின் ஆட்சிக்கால அடையாளங்கள். அதுபோலவே, மொழிச்சிக்கல், எல்லைப்பிரச்னைகள், நதிநீர் விவகாரம், வெளிவுறவுக்கொள்கைக் குளருபடிகள் ஆகியவற்றின் தொடக்கப்புள்ளியும் நேருவின் ஆட்சிக்காலமே.
காஷ்மீர் சிக்கலை ஜ.நா சபைக்குக் கொண்டுசென்றவரே நேருதான் என்கிறார்கள். உண்மைதான் ஆனால் அவர் எந்த பின்னணியில் அதை ஜ.நாவுக்குக் கொண்டுசென்றார்?.
சீனாவுடனான யுத்தத் தோல்விக்குக் காரணம் நேருவின் தவறான கணிப்பு என்கிறார்கள். உண்மைதான். ஆனால் அவருடைய கணிப்புகுப் பின்னணி என்ன?
இப்படி இந்தியாவின் எரியும் பிரச்னைகள் பலவற்றையும் நேரு கையாண்ட
விதத்தை இளைய தலைமுறைக்கு புரியும் மொழியில் பதிவுசெய்திருக்கிறார்.நூலாசிரியர் ரமணன்.
நேருவின் ஆட்சி பற்றிய விமர்சனங்கள் பரவலாக எழுந்திருக்கும் நிலையில், இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.