புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாட்டுக்கு பேலும் பெரும் புகழ் சேர்த்துக் குவிக்க வாழ்ந்து காட்டிய நற்றமிழரைப் படம் பிடித்துக் காட்டியிருப்பது,பெரியோரைத் துதிபாடுவதற்காக அல்ல என்பதையும்,மேலும் புகழ் சேர்க்க உங்கள் ஆற்றலை பயன்படுத்துங்கள் என்று அறௌகூவல் விடும் நூலாகத்தான் பேராசிரியர் தி.இராசகோபாலன் தன் ஆசிரியத் தொழிலை மறவாமல் தொடர்ந்து செய்துள்ளார்.இந்நூல்,ஒரு அரசியல் கட்சியின் பிரகடனம் அல்ல.தமிழ் மக்கள் தக்காரை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் தமிழ் மக்களின் பொதுவான ஞானக் குரலாகவும் தெரிகிறது.