’டயபட்டீஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துகொண்டு சமாளிக்கலாமே தவிர அதைப் பூரணமாக குணப்படுத்த முடியாது!’
என்பது தான் மக்களிடையே காலம்காலமாக நிலவும் கருத்து. ஆனால் அது உண்மையில்லை.
நீரிழிவிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது நூற்றுக்கு நூறு சாத்தியமே என்பதை இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது. நாற்பதாண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் எஸ். விஜயராகவனின் வழிகாட்டுதலின்பேரில் நூலசிரியர் சுஜாதா தேசிகன் நீரிழிவிலிருந்து விடுபட்டுக் காட்டி இருக்கிறார். இந்த அதிசயம் எப்படிச் சாத்தியமானது என்பதையும் தெளிவாக, எளிமையாக இதில் பதிவு செய்திருக்கிறார்.