எல்லோரும் வேலைக்குப் போய்த்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை.சுயமாக தொழில் வியாபாரம் துவங்கி,அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றவர்கள் எவ்வளவோ பேர்.
பெரிய படிப்பு,பெரிய முதலீடு ஆகிய இரண்டுமே இல்லாமல் ஜெயித்தவர்களுக்கும் நம் நாட்டில் குறைவில்லை.
வியாபாரம் தொடங்க,வெற்றி பெற வாய்ப்புகளை கண்டுபிடிக்கிற பார்வையும்,செய்துபார்க்கிற துணிவும்,தளராத மனமும் போதும் என்று நிஉஜ உதாரணங்களைச் சொல்லி எவரேனும் விளக்கினால் எப்படி இருக்கும்!
அடிப்பட்டவர்களை பற்றியதுதான் இந்தப் புத்தகம்.ஜூஸ் கடை,ஜெராக்ஸ் கடை,தையல் கடை போன்றவை முதல் பேஷன் டிசைனிங்,பிரான்சைஸ்,K.P.O.வரையிலான பல்வேறு வகையான வியாபாரங்களில் ஜெயித்தவர்கள்,எப்படி என்ன செய்தார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறார் ‘அள்ள அள்ள பணம்’ புகழ் சோம வள்ளியப்பன்.
ஆனந்த விகடனில் ‘பணம் பண்ணலாம் பணம் பணம்” என்று, 29 வாரங்கள் வெளிவந்து வாசகர்களின் பெரிய பாரட்டைப் பெற்ற தகவல்கள்.அப்டேட் செய்யப்பட்டது.