தமிழ் நிலத்தின் நினைவுகளில் கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015,டிசம்பர் 2ஆம் தேதி சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது. என்றென்றைக்கும் மறையாத வடுவாக அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக அந்த தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட்டு அலறும் அபயக் குரல்களாலும் அதனூடே பெருகும் மகத்தான மானுட அன்பினாலும் இந்த நகரம் நிரம்பியிருந்தது. அந்த அழிவின் காலத்திற்கு சாட்சியம் சொல்கிறது விநாயக முருகனின் இந்த நீர் நாவல். இந்த நெருக்கடியை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதற்கு சாட்சியம் இந்த நாவல்.