சாதாரணமான மனிதர்கள் என்று எவருமே கிடையாது.நினைத்தால் முயன்றால் எல்லோராலுமே போற்றத்தகு செயல்களைச் செய்ய முடியும் என்பதை மாணவ மாணவியர்கள் இளையோர் உணரவேண்டும் என்பதற்காகவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
எழுதியிருப்பவர்,தமிழகத்தின் மிகச்ச் சிறந்த ஊக்குவிப்பு பேச்சாளர் மற்றும் பல்வேறு புத்தகங்களின் ஆசிரியர் திரு.சோம வள்ளியப்பன்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மனிதவளத்துறையில் பணியாற்றிய,ஆயிரக்கணக்கான ஊழியர்களை சந்தித்தவர்,பலவேறு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் உரையாடியவர் சோம வள்ளியப்பன்.