எல்லாவற்றிலும் அரசியலுண்டு என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். அதனடிப்படையிலான உரையாடல்களையே தீவிரமாக இக்காலத்தில் விரும்பவும் செய்கிறேன். இத்தொகுப்பிலுள்ள ஆளுமைகளிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் என்னுடையவை மட்டுமல்ல. சிலவேளைகளில் உங்களுடையதாகவும் இருக்கும். காலத்தினுடையதாகவும் அமைந்திருக்கிறது. நான் உரையாடலை அரசியலின் அவசியமாய் அணுகுகிறேன். இந்த உரையாடல்களில் ஆளுமைகளின் பதில்களுக்கு பதிலடியாய் மறுகேள்வியை பெரும்பாலும் நான் தவிர்த்தேன். கேள்விகள் நிறைந்திருக்கும் எல்லாத் தனங்களிலும் பதில்களும் நிறைந்திருக்கின்றன என்பதே காரணமன்றி வேறெதுவுமில்லை.