அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்பவங்கள் எல்லாம் அழகான கற்பனைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மனத்தை வருடும் எளிமையான மொழியில் அழகாகப் புனையப்பட்டுள்ளது இந்நவீனம்.ிருஷ்ணதேவ ராயரின் பேரரான அச்சுத ராயர் காலத்தில் நடக்கும் இந்த நவீனம், தஞ்சைப் பெரிய கோவிலில் செவ்வப்ப நாயக்கரால் நந்தி நிறுவப்படும் வரை, மிக அழகாகப் புனையப்பட்டுள்ளது. இன்று தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் நாம் காணும் பெரிய நந்திக்குப் பின்னே உள்ள கதை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. பொதுவாக கோவில்களில் நடக்கும் தீப ஆராதனைகள் பற்றிய விளக்கங்களும், இசை பற்றிய நுணுக்கமான குறிப்புகளும், நாவலாசிரியரான மங்களம் ராமமூர்த்தியின் திறமைக்குச் சான்றுகள். ஒரு பெண் எழுதிய வரலாற்று நாவல் என்ற வகையில் இந்நாவல் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.ங்களம் ராமமூர்த்தி (28.10.1928 - 24.10.2009)ிதம்பரம், தஞ்சாவூர் அருகிலுள்ள வல்லம்படுகை என்னும் ஊரில் பிறந்தவர். நாயக்கர் கால வரலாற்றில் அவருக்கு ஏற்பட்ட தீவிர வேட்கையின் விளைவே இந்நாவல். வரலாறோடு சேர்த்து கர்நாடக இசையிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. கோயில்களின் புராணங்களைத் தேடிப்பிடித்து வாசிப்பதில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். இலக்கியம், இலக்கண வரைமுறை, தத்துவக் கோட்பாடுகள் ஆகியவை அவர் ஆர்வம் செலுத்திய பிற துறைகள். கவிதை, சிறுகதை, குறுநாவல், மொழிபெயர்ப்பு ஆகிய களங்களிலும் அவர் இயங்கி இருக்கிறார். அவர் எழுதி வெளியிட்ட ஒரே சரித்திர நாவல் இதுவே.