பறையர்கள் என்பவர்கள் யார் என்னும் ஆதாரக் கேள்வியுடன் தொடங்கும் இந்த முக்கியமான ஆய்வுநூல் 19ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலான பறையர்களின் சமூக,அரசியல்,பொருளாதார வாழ்க்கை முறையை மிக விரிவாகவும் ஆதாரப்பூர்வாமாகவும் பதிவு செய்திருக்கிறது.பிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு ஆட்படுவதற்கு முன்பு பறையர்களின் வாழ்நிலை எப்படி இருந்தது என்பதையும் ஆட்பட்ட பின்னர் எத்தகைய மாற்றங்களையெல்லாம் சந்திக்க நேர்ந்தது என்பதையும் நுணுக்கமாக ஒப்பிட்டு ஆராய்கிறார்கள்.
விளிம்புநிலை மக்களின் வரலாறு எப்படி ஆய்வு செய்யப்படவேண்டும்,எப்படி ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு அருமையான உதாரணம்.சாதி,அரசியல்,வரலாறு,சமூகவியல் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ள அனைவரும் போற்றி வரவேற்கவேண்டிய மிக முக்கியமான பதிவு நூல்.