இந்த நூல் தருக்க முறையில் வரலாற்றை சொல்லிச் செல்கிறது.இதிலே காலங்களின் இயங்குநிலைகளோடு கூடிய வரலாறு இருக்கிறது.மன்னர்களின்,பாளையங்களின் வாரிசுரிமைகளும் அதிகாரப்பகிர்வுகளோடும் கூடிய அரசியல் இருக்கிறது.சாதிகளாகவும்,வலங்கை-இடங்கையாகவும்,வேளாண்குழுக்களாகவும்,வாணிகக் குழுக்களாகவும்,சேவை குழுக்களாகவும் கட்டமைந்து கிடந்த சமூக அமைப்பு இருக்கிறது.குடும்பம்,பெண்,நிலபாகுபாடு,கல்வி,கலை முதலியவை உள்ளிட்ட பண்பாட்டுத் தளம் இருக்கிறது.