நாடற்றவன்
2012 இல் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது நாடற்ற ஒருத்தர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொண்டார். உலகத்திலே நாடு இல்லாத அத்தனை பேருக்கும் பிரதிநிதியாக ஓடினார். அவரை எப்படி மறக்க முடியும்? அவர் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை. ஒரு பதக்கமும் பெறவில்லை. உலகத்துக்குக் கண்கள் அவரில் இருந்தன. நான் அவரை மட்டுமே பார்த்தேன். அவர்தான் என்னுடைய வீரர்.