சபிக்கபட்ட மே 21. 1991 ஆம் தேதி இரவு ஸ்ரீ பெரம்பத்தூரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தப் பின்னணிப் புதிர்களை விடுவிக்கும் பொழுது, பேராசிரியர் சந்தரசேகரன் ஒப்பற்ற நடையழகால் பல முக்கியத் தகவல்களைத் தருகிறார். கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளதால், புத்தகம் படிக்க விருவிருப்பாக, கையில் எடுத்தால் கீழே வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் படித்துவிட தூண்டுகிறது.
டாக்டர் ஜஸ்டின் ஏஆர். லட்சுமணன்
பிரதம அறிவியல் ஆய்வாளர், தடவியல் அறிவியல் துறையின் இயக்குநர் என்ற முறையில் பேராசிரியர் சந்திரசேகரன், கொலையாளி மற்றும் அவர்களின் சகாக்களை அடையாளம் காண, தடயவியல் தொழிநுட்பத்தைக் கையாண்டிருக்கிறார். குறுகியகால அவகாசத்தில் அவர் தடையங்களை சேகரித்து, கொலையாளியை அடையாளம் கண்டுபிடித்த செயல் பெரிதும் பாராட்டபட வேண்டிய ஒன்று. தடவியல் துறையினர். புலனாய்வாளர்கள், காவலர்கள் மற்றும் இவை தொடர்புடைய நபர்கள் பலரும் இந்த வழக்கை புலனாய்வதில் பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளனர்.
சுர்ஜித் சிங் பர்னாலா
இதுவரை சொல்லப்படாத ராஜீவ் காந்தி படுகொலைப் பின்னணி