மொகலாய இந்தியாவில் எனது பயணக்குறிப்புகள்(1653-1708)
1653இல் வெனிஸ் நகரத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த நிக்கொலா மனுச்சிக்கு அப்போது வயது பதினான்கு. மனுச்சி ஒளரங்கசீப்பின் சகோதரர் தாராவின் போர்படை வீரனாகவும் மொகலாய அரசவை மருத்துவராகவும் பணியாற்றியவர். இறுதியில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார். மொகலாய ஆட்சியின்போது தான் பெற்ற அனுபவங்களை மனுச்சி storia do mogor என்ற நூலாக எழுதினார். சுமார் 2000 பக்கங்கள் கொண்ட இந்த நூலை சென்னையிலிருந்தபோது எழுதியுள்ளார்.இவரது மகன் மர்க்கரெட் இர்வின் இந்த நூலின் சுவையான பகுதிகளை தேர்வு செய்து தொகுத்து வெளியிட்டார். இத்தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பே ‘மொகலாய இந்தியாவில் எனது பயணக்குறிப்புகள்’.
தமிழில்: சரவணன், சந்தியா பதிப்பகம்