தோழர் தா.பா. அவர்களின் படைப்புகளில் இந்நூல்,காலத்திற்கும் பெயர் சொல்லி நிற்கும்,காரணம் இந்நூலின் ஆசிரியர் கையாண்டிருக்கும் செம்மாந்த நடை,ஆற்றுநீரின் நடை,ஊற்றுநீரின் நடை,அருவியின் நடை,ஏறு நடை,பீடு நடை அத்தனையும் இந்நூலில் சொந்தம் கொண்டாடி நிற்கின்றன. ‘வார்த்தை வணிகர்கள்’.பேச்சுப் பிரியர்கள்,காயம்படாத வீரர்’என்பன போன்ற சொற்றொடர்கள்,பட்டுச்சேலையில் ஜரிகைகளாக ஜொலிக்கின்றன.இந்நூல் இன்றைய இளைஞர்களின் கையேடு ஆகட்டும்;இன்றைய ஆசிரியச் சமுதாயத்தின் நாளேடு ஆகட்டும்;புரட்சியாளர்கள் போர்வாள் ஆகட்டும்! பேராசிரியர் தி.இராசகோபாலன்