மழைக்காலமும் குயிலோசையும்
மிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் மா.கிருஷ்ணன் (1912-1996) தலைசிறந்த இயற்கையியலாளராகக் கருதப்படுகிறார். அறிவியல் நோக்கில் காட்டுயிர்கள் பற்றித் தமிழில் முதலில் எழுதியவர் கிருஷ்ணன்தான். காட்டுயிர்களைப் பல சிறப்பான கோட்டோவியங்களிலும அவர் சித்தரித்திருக்கிறார். இவையெல்லாம் இங்கு முதன் முதலாக நூலாக்கம் பெறுககின்றன. பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் மா.கிருஷ்ணன் நாவலாசிரியர் அ.மாதவையாவின் மகன் தியடோர் பாஸ்கரன் திரைப்பட வரலாறு,கானுயிர் ஆகிய துறைகளில் முக்கியப் பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். இவை பற்றித் தமிழிலும் ஆங்கிலுத்திலும் பாஸ்கரன் எழுதியுள்ள கட்டுரைகள் ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுசன ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.