எழுத்தாளனின் பலமும் பலவீனமும் மழை.இதற்கு இருவரும் விதிவிலக்கல்ல.இவர் கதைகளில் மழை ஒரு அலாதியான குளுமையுடன் வாசகனை நனைத்து செல்கிறது.ஏதாவது ஒரு மலைவாசஸ்த்தலத்திற்கு அழைத்துச் செல்கிறது.பனியால் ஈரமான வீடுகளும்,மலைப்பூக்களும் ஈர்த்து ரசிக்க வைக்கின்றன.இரவும்,பெருநிசப்தமும்.திரையிசைப்பாடல்களும் அமைதியைக் கொடுக்கின்றன.கடந்தகால காதல்,பள்ளி ஞாபகங்கள்,நினைவில் தங்கிய பதின்பருவ நட்புகள் என வாசகனை மீண்டும் தன் இளமையை திரும்பிப் பார்க்கவைக்கும் சாதூரியம் கொண்டவை இவர் கதைகள்.