சிக்கலான விஷயங்களையும் நக்கலும், நையாண்டியும் கலந்து எளிமையாகத் தொட்டுச் செல்லும் வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பு இது. கிராமத்திலும், தான் வாழ்ந்த நகரங்களிலும் எதிர்கொண்ட மனிதர்களை துல்லியமாகவும் அழுத்தமாகவும் எழுத்துகளில் கொண்டு வந்துவிடும் சூட்சுமத்தின் வழியாக கொண்டாட்டத்தை உருவாக்குகிறார். சாமானிய மனிதனின் அப்பட்டமான இந்த அனுபவங்களை வாசிக்கும் போது அவை வண்ணங்களின் கலவையாக மனதுக்குள் இறங்குகிறது – மாறி மாறி ஒளிரும் வண்ணங்களின் மழையாக…