தமிழகத்தில் இதுவரை நடந்திராத மாபெரும் போராட்டம் தந்த கூட்டுணர்வும் பேரெழுச்சியும்,அரேபிய வசந்தத்தைப் போலத் தேய்ந்து போய்விடக் கூடுமோ எனும் வினாவோடு தொடங்கும் தோழர் வி.எம்.எஸ் அவர்கலின் கட்டுரைத் தொகுப்பு,நவீன காலத்தின் அதிகாரம் நோக்கிய நகர்வில்,மனித மாண்புகள் தொலைந்துகொண்டிருக்கும் அவலத்தைக் களந்தோறும் கண்டறிகின்றது.
மார்க்சியம்,சுயமரியாதை இயக்கம்,திராவிடம் எனச் சித்தாந்தங்கள் செழித்து,சமூக நீதியில் உயரிய தனித்துவம் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் இன்று சுயமிழந்து,அதிகார பேர அரசியலில் விற்கப்படும் பொருளாகக் கரைந்து போனதைப் பதிவுகளாக்குகின்றன இக்கட்டுரைகள்.