மிகுந்த வரவேற்புடன் ஜுனியர் விகடனில் தொடராக நான் எழுதி வரும் எனது இந்தியாவின் முதல் பாகம் புத்தகமாக வெளியாகிறது
முதல் நூறு கட்டுரைகள் இதில் அடங்கியிருக்கின்றன
விகடன் பதிப்பகம் வெளியிட உள்ள இப்புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாக உள்ளது,
ஐநூறு பக்க அளவில் மிக நேர்த்தியாக, கெட்டி அட்டையில் உருவாக்கபட்டுள்ளது எனது இந்தியா
புத்தக கண்காட்சியில் உள்ள விகடன் பதிப்பக அரங்கில் இந்நூல் விற்பனைக்கு கிடைக்கும்
மிகுந்த வரவேற்புடன் ஜுனியர் விகடனில் தொடராக வந்த “மறைக்கப்பட்ட இந்தியா” நூறு கட்டுரைகள் அடங்கியது
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விசயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், கட்டமைப்போடும், இவ்வளவு உயரத்துக்கு நமக்கு காட்டி இருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு இந்நூலில் எஸ்.ராமகிருஸ்ணன் அவர்கள் இந்தியா குறித்த நமக்குத் தெரியாத, கேள்விப்படாத பல விசயங்களை, நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், மனிதாபிமானத்தோடும், சமூக அக்கறையோடும் கூறி இருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.