வேதாந்த அறிவியலைப் படிப்படியாக எவ்வாறு தினசரி வாழ்வில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரலாம் என்பதையும்,மந்திர வாழ்க்கை எப்படி என்பதையும் தெரிவித்திருக்கிறேன்.அவை உங்கள் சொந்தப் பயணத்திற்கு வழிகாட்டும் வரைபடங்களாகப் பயன்படும்.தனிப்பட்ட மற்றும் உலகளாவிய முறைகளில் உங்கள் கனவுகளை எப்படி நிஜமாக்குவது என்றும் கற்றுக் கொள்ளலாம்.வலிந்து போராடுவதற்கு பதிலாகச் சந்தோஷத்துடன் எவ்வாறு வளர்ச்சி அடையலாம் என்றும் அவை எடுத்துரைக்கும்.உங்கள் பழைய நாட்களில் இருந்து எப்படி விடுபடலாம்,அச்சங்களையும்,தடைகளையும்,குறுகிய எல்லைகளையும் எவ்விதம் தகர்த்தெறிவது என்றும் அவை உணர்த்தும்.ஆன்மாவின் இரகசியக் குரலைக் கேட்டுணர்ந்து நீங்கள் வாழ்வின் குறிக்கோளை அடையவும் அவை உதவி செய்கின்றன.