நவீனம்,நாகரிகம் என்ற பெயரில் நாம் கடைபிடிக்கும் உணவுப் பழக்கங்களும் இதர செயல்பாடுகளும் நமது பரிணாமப் பாதையிலிருந்து முரண்பட்டிருப்பது சர்க்கரை,இரத்த அழுத்தம்,கிட்டப் பார்வை போன்ற பல நீண்ட கால நோய்களை ஏற்படுத்தி நமது துயரத்தையும் செலவினத்தையும் அதிகரிப்பதோடு,நாம் அவற்றுக்கு அளிக்கும் சிகிச்சை ஒரு விஷ வளையத்தை ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறார் பேரா.லிபர்மேன்.இந்நோய்களைத் தவிர்ப்பதற்கான எளிய தீர்வுகளையும் இயற்கையோடு முரண்படாமல் வாழும் வழிகளையும் முன்வைத்திருக்கிறார்.அனைத்துப் பிரிவு மக்களும் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பு.