நவீன வாழ்வியலைச் சுற்றிப் பின்னியுள்ள வாழ்வின்மையை புனைவெழுத்துகளின் கதையாடலை மொழி சிறிது சிறிதாய் விளிம்பின் புறத்திற்கு நகர்த்திவிடும் கதைப்பிரதிகள் அபூர்வமானவை.கதையென்ற மொழி அம்சம் தன்னையே சொல்லுதலால் பெயர்த்துக் கொள்கிறது...கதைப் பிரதிகளில் கிளைக்கும் பேய்மையுருக்கள் தங்களைப் பிளந்து பன்மைப்படுத்திய வண்ணமாய் வெளியேறிவிடுகின்றன.மறுபடியும் வாசகப் புலத்திலிருந்து கதைப்பிரதியை எதிரிட்டு சந்திக்கும் ஒரு நுண்மையான கவித்துவ இழையை கதையாடலில் பேய்மையுருக்களாக நிழலாடி அசையும்.
நவீன உயிர்த்திருத்தலின் உள்ளுமைகள் பெருகிய வண்ணமாய் கதைப் பிரதிகளின் பொருண்மை நாளந்தம் திக்கற்ற யாத்திரையில் பதிகிறது வாழ்வியல் தடயங்களில் புனைவுயிரிகளின் ரூபங்களை ஜார்ஜ் சாமுவேலின் இம்மொழியாக்க கதைப்பிரதிகளில் எதிர்கொள்ளலாம். -எஸ்.சண்முகம்