திருக்குறளில் காணப்படும் மேலாண்மை சிந்தனைகள் குறித்து பல நூல்கள் வெளிவந்துள்ளன.சங்க இலக்கியங்களின் மேலாண்மைக் கருத்துக்கள் குறித்தும் சில சிறு புத்தகங்கள் மற்றும் உரைகளும் வந்திருக்கின்றன.ஆனால்,கம்பராமாயணத்தைப் பொறுத்தவரை பலரும் அதை பக்தி இலக்கியமாகவோ அல்லது தமிழ் காவியமாகவோ மட்டுமே பாத்திருக்க,சிலர் மட்டும் அதில் காணப்படும் அறிவியல்,அரசியல்,சமூகவியல்,பெண்ணியம்,வானியல் ஆகிய துறைகளைப் பற்றிக் கண்டறிந்து எழுதியிருக்கிறார்கள்.